search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு"

    காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் சுற்றுச்சூழலை மேம்படுத்த ஒரு லட்சம் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என ராகுல் காந்தி உறுதி அளித்தார். #RahulGandhi
    புதுடெல்லி:

    தற்போதைய பாராளுமன்ற தேர்தலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அரசியல் கட்சிகளின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக திகழ்கிறது. சமீபத்தில் பா.ஜனதா சார்பில் நடந்த சைக்கிள் பேரணியில், பா.ஜனதா தலைவர் விஜய் கோயல் பேசுகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நாட்டின் தற்போதைய முக்கிய தேவையாக உள்ளது. ஆனால் டெல்லி மாநில அரசு இதில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருக்கிறது என குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி நேற்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் சுற்றுச்சூழலை மேம்படுத்த ஒரு லட்சம் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்க நீர்நிலைகளை மேம்படுத்தி தண்ணீர் சேமிப்புக்கு வழிவகுப்போம். பயன்பாடற்ற நிலங்களை மறுஉருவாக்கம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம்.

    எங்கள் தேர்தல் அறிக்கையில், வேலைவாய்ப்பை உருவாக்குதல், விவசாயிகளின் துயரத்தை போக்குதல், கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், சுகாதாரத்தை பேணிகாத்தல், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த வழிகாட்டுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.#RahulGandhi
    ×